திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 9
மூலப் பாடல்
பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப் பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன் தன்னால் தொழப்படு வாரில்லை தானே.
பொருள்
பொன் போன்ற சடையை உடைய சிவபெருமானே நான் வணங்கும் இறைவன் ஆவான்.
தனக்கு மேலாக வேறு யாரும் இல்லாததால், அவன் யாரையும் வணங்குவதில்லை.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 9


