திருமந்திரம் · 3000 பாடல்கள்
திருமந்திரம்
தந்திரம் 1
பாடல் 7
மூலப் பாடல்
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
பொருள்
மும்மூர்த்திகளுக்கும் மூத்தவனாய், தனக்கு நிகரில்லாத இறைவனைத் தந்தையாக நினைத்தால் அவன் நமக்குத் தந்தையாவான்.
பொன்னைப் போன்ற உயர் ஞானத்தை அளிக்கும் சிறந்த குருவாகவும் அவனே விளங்குகிறான்.
🎧 பாடலைக் கேளுங்கள்
திருமந்திரம் · தந்திரம் 1 · பாடல் 7


